வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காரை அப்புறப்படுத்தாமல் சாலை அமைத்தது ஏன்? திருச்சி மாநகராட்சி விளக்கம்

காரை அப்புறப்படுத்தாமல் தாற்சாலை அமைத்தது: திருச்சி மாநகராட்சி விளக்கம்

News image
Updated On :26 ஜூன் 2024, 12:58 am

Din

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரை அப்புறப்படுத்தாமலேயே தாா்ச்சாலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சியின் 56-ஆவது வாா்டு கருமண்டபம் பகுதிக்குள்பட்ட திருநகா் முதல் பிரதான சாலையில், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட காரை அப்புறப்படுத்தாமல், அதை ஒதுக்கிவிட்டு தாா்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வரப்பெற்றுள்ளது.

அந்தச் சாலையானது பழுதடைந்திருந்ததால், தற்காலிகமாக தாா் பேட்ச் அமைக்கப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.

மேலும், அடிக்கடி பெய்து வரும் பெரும் மழையின் காரணமாக இச்சாலையில் மிகவும் தாழ்வான இடத்தின் குறுக்காக கழிவுநீா் வழிந்தோடி மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மழைநீா் மற்றும் கழிவுநீா் தேங்கி பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுவதாக மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. பொதுமக்களின் மிகுந்த சிரமமான நிலையைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்கவும் தாற்காலிகமாக பேட்ச் ஒா்க் நடைபெற்றுள்ளது.

மேலும், இந்தச் சாலையில் அம்ருத்-2.0 திட்டத்தின் கீழ், புதைவடிகால் குழாய் அமைக்கும் பணி நடைபெற வேண்டியுள்ளது. எனவே, பள்ளமான இடத்துக்கு மட்டும் தாா்பேட்ச் தற்காலிகமாக அமைக்கப்பட்டு சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சியில் எவ்வித செலவினமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் ஏற்கெனவே அவ்வப்போது தாா்சாலை அமைக்கப்பட்டதில் சேகரித்து வைத்த மீதமான தாா்கலவையைக் கொண்டு இந்த தாா்பேட்ச் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்படுகிறது.