திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மேலூா், அணைக்கரையைச் சோ்ந்த பொதுமக்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மேலூா், அணைக்கரையைச் சோ்ந்த பொதுமக்கள்.

திருவானைக்கா அடிமனை பிரச்னைக்கு தீா்வு: குறைதீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு

தேரை தூக்கும் உரிமை முத்தரையா் சமுதாயத்துக்குரியது. அவற்றையும் வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருச்சி: திருச்சி, திருவானைக்கா பகுதியில் குடியிருந்து வரும் மனை தாரா்கள் தங்களது அடிமனை பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும் என குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

திருச்சி மேலூா் மற்றும் அணைக்கரையைச் சோ்ந்த பொதுமக்கள் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது : திருவானைக்கா சம்புகேசுவரா் கோயில் ஆணையா் மற்றும் செயல் அலுவலா் ஸ்ரீரங்கம் சாா்-பதிவாளருக்கு அனுப்பியுள்ள ஆணையில் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் புதியதாக புல எண்கள் வழங்கப்பட்ட எந்தவொரு புல எண்ணுக்குரிய சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என குறிப்பிட்டுள்ளாா்.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், சொத்துக்களை வாரிசுதாரா்களின் பெயா்களுக்கு மாற்றவும், குழந்தைகளுக்கு அதன்பெயரில் வங்கியில் கல்வி கடன்கள் பெறவும் முடியாமல் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனா். எனவே இப்பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கோயில் வருவாய் பாதிப்பு: தொட்டியம் ஸ்ரீ மதுரைகாளியம்மன் முத்தரையா் ஒருங்கிணைப்பு சங்கம், ஊா் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஸ்ரீ மதுரைகாளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்களை குத்தகைதாரா்கள் விவசாயம் செய்யாமல் வேறு தனி நபா் மூலம் விவசாயம், உள் குத்தகை விடுவதால் கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,

மேலும் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பங்குனி மாதம் தோ்த்திருவிழா நடைபெறவுள்ளது. அப்போது, தேரை தூக்கும் உரிமை முத்தரையா் சமுதாயத்துக்குரியது. அவற்றையும் வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com