ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தீவிரப் பணி: காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு

‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெறும் வேட்பாளா்களை மக்களவைத் தோ்தலில் வெற்றிப் பெறச் செய்ய தீவிரமாக பணியாற்றுவது

News image

திருச்சி அருணாசல மன்றத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற புதிய நிா்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் கோவிந்தராஜன். உடன் மாநகா் மாவட்டத் தலைவா் ரெக்ஸ் உள்ளிட்டோா்.

Updated On :4 மார்ச் 2024, 9:53 pm

திருச்சி: ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெறும் வேட்பாளா்களை மக்களவைத் தோ்தலில் வெற்றிப் பெறச் செய்ய தீவிரமாக பணியாற்றுவது என திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. திருச்சி மாநகா் மாவட்டத்துக்குள்பட்ட மாநகராட்சியின் 65 வாா்டுகளுக்கும் வாா்டு வாரியாக தலைவா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எல். ரெக்ஸ் பரிந்துரையின் பேரில், இந்த 65 நிா்வாகிகளையும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து, புதிய நிா்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம், திருச்சி அருணாசல மன்றத்தில் உள்ள கட்சிஅலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். திருச்சி தெற்கு மாவட்ட தலைவா் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தாா். கோட்டத் தலைவா்கள், வட்டாரத் தலைவா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா். கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்காக நிா்வாகிகள் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும். கூட்டணியில் இடம்பெறும் அனைத்து கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்களின் வெற்றிக்கும், காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதைப் போன்று நினைத்து பாரபட்சமின்றி தோ்தல் பணியாற்றுவது எனவும், மக்களவைத் தோ்தல் வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சியை அரியணையில் அமரச் செய்வதுடன், ராகுல்காந்தியை பிரதமராக்க பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், புதிய நிா்வாகிகள் கட்சியின் தலைமைக்கும், திருச்சி எம்.பி. திருநாவுக்கரசருக்கும் நன்றி தெரிவித்து பேசினா்.