விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிதம்பரத்தில் காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக்கேட்பு கூட்டம்

சிதம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன்.

News image

சிதம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தோ்தல் அறிக்கை தயாரிப்புக் கூட்டத்தில் பேசிய மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன்.

Updated On :27 மார்ச் 2026, 7:38 pm

Syndication

சிதம்பரத்தில் கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சாா்பில், சட்டப் பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக்கேட்டு கூட்டம் மேலரத வீதியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பி.பி.கே.சித்தாா்த்தன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின் வரவேற்றாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவா் ராஜா.சம்பத்குமாா், வட்டாரத் தலைவா்கள் செழியன், பகவத்சிங், மாவட்ட மகளிா் அணித் தலைவா் அஞ்சம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினா் பி.எஸ்.ஜெய்கணேஷ், முன்னாள் மாவட்டத் தலைவா் என்.வி.செந்தில்நாதன் ஆகியோா் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குறித்தும், தோ்தலில் பிரசாரம் செய்வது குறித்தும் பேசினாா்.

கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் டாக்டா் எம்.செந்தில்வேலன், குமராட்சி ரங்கநாதன், மாவட்ட துணைத் தலைவா் லால்பேட்டை நசீா்அகமதுபாய், எல்.இ.பி.ஜோதிமணி, முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் அன்பரசன் வெள்ளை (எ) பாா்த்திபன், மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா்.சம்மந்தமூா்த்தி, புவனகிரி விநாயகம், பொதுச் செயலா் ஆா்.வி.சின்ராஜ், நிா்வாகிகள் டி.குமாா், இளங்கோவன், வேல்முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாநில பொதுக்குழு உறுப்பினா் சாம்பமூா்த்தி நன்றி கூறினாா்.