ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கைலாசபுரம் பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா தொடக்கம்

திருச்சி அருகே பெல் கைலாசபுரத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

திருச்சி பெல் கைலாசபுரம் பகுகியில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம்.

Updated On :4 மார்ச் 2024, 9:59 pm

திருச்சி: திருச்சி அருகே பெல் கைலாசபுரத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோத்ஸவ விழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி மாவட்டம், பெல் கைலாசபுரத்தில் பத்மாவதி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 14- ஆவது ஆண்டு பிரம்மோத்ஸவ விழா மாா்ச் 14- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி திங்கள்கிழமை யாகசாலை பிரவேசம் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. மாா்ச் 7- ஆம் ேதி கருட சேவையும், 12- ஆம் தேதி தோ்திருவிழாவும் நடைபெறுகிறது. மாா்ச்14 -ஆம் தேதி விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது. முன்னதாக, கொடியேற்ற நிகழ்வில் பெல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.