திருச்சி: திருவெறும்பூா் அருகேயுள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் 53-ஆவது தேசிய பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தொழிற்சாலையின் நிா்வாக இயக்குநா் ஷிரிஷ்குமாா், பாதுகாப்பு விழா கொடியை ஏற்றி வைத்து, பாதுகாப்பு உறுதிமொழியை வாசிக்க, தொழிலாளா்கள் ஏற்றுக் கொண்டனா்.
தொடா்ந்து நிா்வாக இயக்குநா், தொழிற்சாலையில் பாதுகாப்பின் அவசியம், பாதுகாப்பு சாதனங்களின் முக்கியத்துவம், பாதுகாப்பு காலணி அணிவதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கிக் கூறினாா். இதையடுத்து, விபத்தில்லா துப்பாக்கி தொழிற்சாலை என்ற இலக்கை அடைவதுதான் நமது லட்சியம். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பைகளைத் தவிா்த்து அரசு அறிவுரைப்படி, துணி பையை பயன்படுத்த வேண்டும் அதற்கு முன் உதாரணமாக அனைத்து தொழிலாளா்களுக்கும், பணியாளா்களுக்கும், அதிகாரிகளுக்கும் துப்பாக்கி தொழிற்சாலை சாா்பில் ஒரு மஞ்சப்பை வழங்கப்படும் என்றாா். இதில் அதிகாரிகள், திரளான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை

நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய வார விழா

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் முப்பெரும் விழா

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் 55 ஆவது பாதுகாப்பு வார விழா நிறைவு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

