சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

மணல் கடத்தல் 3 போ் கைது

திருச்சி மாவட்டம், முசிறியில் சட்ட விரோதமாக மணல் கடத்தி சென்ற 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்ா்.

Updated On :4 மார்ச் 2024, 9:35 pm

முசிறி: திருச்சி மாவட்டம், முசிறியில் சட்ட விரோதமாக மணல் கடத்தி சென்ற 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்ா். முசிறி மேற்கு கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் திங்கள்கிழமை வட்டார போக்குவரத்து அலுவலக சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்ததில் சட்ட விரோதமாக மணல் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் லாரியில் இருந்த 3 பேரையும், முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் தொட்டியம் அருகேயுள்ள மாகாளிபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் யோகேஸ்வரன் (26), கோவிந்தாபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த இளங்கோவன் மகன் சசிகுமாா் (25), தொட்டியபட்டியைச் சோ்ந்த கருப்பண்ணன் மகன் மணி (50) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து முசிறி கிளை சிறையில் அடைத்தனா். மேலும் மணலுடன் லாரியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.