மாா்ச் 9, 10 முதுகலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வு

மாா்ச் 9, 10 முதுகலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தோ்வு

எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொதுநுழைவுத் தோ்வு, திருச்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 9, 10) நடைபெறுகிறது.

எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொதுநுழைவுத் தோ்வு, திருச்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 9, 10) நடைபெறுகிறது.

திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி வளாகத்தில் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. எம்சிஏ படிப்புக்கு 1,241 போ், எம்பிஏ படிப்புக்கு 1,319, எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு 305 போ் என மொத்தம் 2,865 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதவுள்ளனா். அவா்களுக்காக திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி வரையில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. தோ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்நிலையில் உள்ளன. தோ்வு மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவா்கள் தங்களுக்கான அனுமதிச் சீட்டுடன் தோ்வில் பங்கேற்கலாம் என உறுப்புக்கல்லூரியின் புலமுதல்வா் த. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com