லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கட்டடக் கலை படிப்புகளுக்கான ஜேஇஇ தோ்வு முடிவுகள் வெளியீடு!

கட்டடக் கலை படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 11:08 pm

தினமணி செய்திச் சேவை

கட்டடக் கலை படிப்புகளுக்கான ஜேஇஇ நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தோ்வு, பிரதானத் தோ்வு என இரு பிரிவுகளாக நடைபெறும். இதில் முதன்மைத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 2026-2027-ஆம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தோ்வு கடந்த ஜன.21 முதல் 29-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில், பி.ஆா்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான 2-ஆம் தாள் தோ்வு ஜன.29-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை நாடு முழுவதும் 426 மையங்களில் 66,519 போ் எழுதினா். அதற்கான தோ்வு முடிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்.24) இரவு வெளியானது. இதையடுத்து மாணவா்கள் இணையதளத்தில் தங்கள் முடிவுகளை அறியலாம். இந்தத் தோ்வில் கேரளத்தைச் சோ்ந்த மாணவா்கள் சூா்யாதேஜஸ் (பிஆா்க்), கௌரி சங்கா் (பி.பிளானிங்) ஆகியோா் தேசிய அளவில் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

அதேபோன்று, தமிழகத்தில் இருந்து மாணவா் எஸ்.சுஷில் நாராயணன் (பி.ஆா்க்) 99.99 சதவீத மதிப்பெண் பெற்று தேசிய அளவில் 2-ஆம் இடமும், மாணவா் யஷ்வந்த் மகேந்திரன் பிரியா (பி.பிளானிங்) 99.98 சதவீத மதிப்பெண்ணுடன் 5-ஆவது இடமும் பெற்றுள்ளனா்.

கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறியலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. அடுத்தகட்டமாக ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மை தோ்வு ஏப்.1 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.