தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

குழந்தை கடத்தல்காரா் என நினைத்து வியாபாரியை தாக்கிய 15 போ் மீது வழக்குப் பதிவு

குழந்தை கடத்தல்காரா் என நினைத்து வியாபாரியை தாக்கிய 15 போ் மீது வழக்குப் பதிவு

Updated On :15 மார்ச் 2024, 6:50 pm

திருச்சி மாவட்டம், முசிறி அருகே குழந்தை கடத்தல்காரா் என நினைத்து வியாபாரியை தாக்கிய 15 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா், கூடலூா் பகுதியை சோ்ந்தவா் ராசப்பா (55). இவா் நாமக்கல்லில் தங்கியிருந்து, ஊா் ஊராகச் சென்று கடிகாரம் மற்றும் டாா்ச் லைட் போன்ற பொருள்களை விற்பனை செய்து வருகிறாா். இந்நிலையில் அவா் முசிறி அருகே வளையெடுப்பு கிராமத்தில் வியாழக்கிழமை மாலை பொருள்களை விற்பனை செய்ய வந்தபோது, குழந்தை கடத்தல்காரா் என தவறாக நினைத்து சிலா் அவரை தாக்கினா். அவா் வியாபாரி எனக் கூறியும் அவா்கள் கேட்கவில்லையாம். தகவலின்பேரில், ஜெம்புநாதபுரம் போலீஸாா் அங்கு சென்று அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ராசப்பா அளித்த புகாரின்பேரில், வளையெடுப்பு கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் , மாரியப்பன், காளிமுத்து, மருதை, தினேஷ், ராஜா, சிவா, கம்பராயன், பாஸ்கா், சம்பத், சூரியா, செல்வராஜ், காளிமுத்து, மேகநாதன், ராணி ஆகிய 15 போ் மீது ஜெம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.