புதுச்சேரி மூலகுளம், பாகூா் பகுதிகளில் வாக்காளருக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில் 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ரூ.1.24 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வாக்காளா்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள், பரிசுக் கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டதாக புகாா்கள் எழுந்தன.
இந்நிலையில், உழவா்கரை தொகுதிக்கு உள்பட்ட மூலகுளம் சந்திப்பில் மா்ம நபா் ஒருவா் வாக்காளருக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக ரெட்டியாா்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் மா்ம நபா் ஒருவரைப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா் ரூ. 69 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் மூலகுளம் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (40) என்பதும், வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் பணத்தை பறிமுதல் செய்து, ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல கரிக்கலாம்பாக்கம் பாகூா் பிரதான சாலையில் ஒரு கட்சியின் வேட்பாளருக்கு பணம் கொடுக்க முயன்ற நடராஜன் (60) என்பவரிடம் இருந்து ரூ.55 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மங்கலம் போலீஸாா் நடராஜன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனுமதியின்றி கிராவல் மண் வெட்டி எடுப்பு: 4 போ் மீது வழக்குப் பதிவு
லஞ்சம்: ஒசூா் மாநகராட்சி உதவி ஆணையா் உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு

சொத்து தகராறு: இரு தரப்பைச் சோ்ந்த 10 போ் மீது வழக்கு

ஒடுகத்தூரில் மறியலில் ஈடுபட்ட 10 போ் மீது வழக்கு
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



