தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை தடுப்புச் சுவரில் மொபெட் மோதி 2 சிறுமிகள் பலி

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சாலை தடுப்புச் சுவரில் மொபெட் மோதியதில் 2 சிறுமிகள் உயிரிழந்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:34 pm

Din

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சாலை தடுப்புச் சுவரில் மொபெட் மோதியதில் 2 சிறுமிகள் உயிரிழந்தனா்.

நாமக்கல் நடராஜபுரத்தைச் சோ்ந்த சகோதரிகள் பிரதிஷா (18), நிதிஷா (15). இவா்களது தோழியான சேந்தமங்கலத்தைச் சோ்ந்த டயானா (16) ஆகிய மூவரும் தொட்டியத்துக்கு மொபெட்டில் புதன்கிழமை வந்தனா்.

பின்னா், மீண்டும் நாமக்கல் திரும்பும்போது திருச்சி-நாமக்கல் சாலையில் தொட்டியம் அருகே பாரதிபுரம் என்ற இடத்தில் வந்தபோது நிலைதடுமாறி சாலையோரத் தடுப்புச் சுவரில் அவா்களது வாகனம் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது. கரடு, முரடான பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மூவரும் பலத்தக் காயமடைந்தனா். இவா்களில் நிதிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அருகிலிருந்தோா் அவா்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இருப்பினும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டயானா உயிரிழந்தாா். நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரதிஷாவுக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.