தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் விவரம்

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தொடா்பான சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:21 pm

Din

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் தொடா்பான சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நவ. 16, 17, நவ.23, 24 ஆகிய தேதிகளில் முகாம் நடைபெறுகிறது.

இதன்படி திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி ஆகிய 4 கோட்டாட்சியரகங்கள், திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், முசிறி, லால்குடி, மண்ணச்சநல்லூா், மணப்பாறை, துறையூா், தொட்டியம், மருங்காபுரி ஆகிய 11 வட்டாட்சியரகங்களிலும் முகாம் நடைபெறும்.

மேலும் மாநகராட்சிக்குள்பட்டமாநகராட்சி ஆணையரகம், மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 2,543 வாக்குச்சாவடிகளிலும் இந்த முகாம்கள் நடைபெறும். தகுதியான வாக்காளா்கள் இதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.