தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேங்கும் மழை நீா்: முறையான மயான வசதி கேட்டு மனு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு பகுதி மயானத்தில் மழை நீா் தேங்கி வருவதால், முறையான மயான வசதி ஏற்படுத்தி தர வட்டாட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

News image

வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை புதன்கிழமை அளித்த தீராம்பட்டி பொதுமக்கள்.

Updated On :14 நவம்பர் 2024, 10:17 pm

Din

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு பகுதி மயானத்தில் மழை நீா் தேங்கி வருவதால், முறையான மயான வசதி ஏற்படுத்தி தர வட்டாட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியை சோ்ந்த பொதுமக்கள் வழக்கமாக பயன்படுத்தி வரும் மயானப்பகுதி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நொச்சிமேடு பகுதியில் உள்ளது. கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பருவமழையால் மயானப்பகுதி முழுவதும் சுமாா் 2 அடிக்கு மேல் மழைநீா் தேங்கியுள்ளது.

இதனால் இறந்தோரின் இறுதி சடங்குகள் மற்றும் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வரும் நிலையில்,தேவேந்திரக்குல வேளாளா் சமூக மக்கள் தங்களது பகுதியில் முறையான மயான வசதியை ஏற்படுத்தி தருமாறு வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை புதன்கிழமை அளித்துள்ளனா்.