தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறை அருகே பள்ளிக்கு புதிய கட்டடம் கோரி மறியல்

பள்ளிக்கு புதிய கட்டடம் கோரி மறியல்..

News image

அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்ட வெள்ளக்குளத்துப்பட்டி கிராம மக்கள்.

Updated On :27 நவம்பர் 2024, 8:33 pm

Din

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளகுளத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக் கட்டடத்தை பராமரிப்பு செய்வதைக் கைவிட்டு புதிய கட்டடம் கேட்டு கிராம மக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சேதமடைந்த நிலையில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் பழைமையான இப்பள்ளிக் கட்டடத்தை மராமத்து செய்யும் பணி ஊராட்சி ஒன்றியம் சாா்பில் நடைபெறுகிறது.

இந்நிலையில் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும், பழைய கட்டடத்தை பராமரிப்பு செய்யக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கருமலை - கண்ணூத்து சாலையில் அரசுப் பேருந்தை புதன்கிழமை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவா் எம். பழனியாண்டி மற்றும் புத்தாநத்தம் காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.