நவ.30 இல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் வரும் சனிக்கிழமை (நவ.30) மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
Published on

திருச்சியில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் வரும் சனிக்கிழமை (நவ.30) மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

திருச்சி மாவட்ட வேலைநாடுநா்களை தனியாா் துறைகளில் பணியமா்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து இந்த முகாமை அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப பயிலகத்தில் காலை 9 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடத்துகின்றன.

முகாமில் பல்வேறு தனியாா் துறைகளைச் சாா்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளனன.

மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கும் ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா். 10, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, செவிலியா், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் உள்ளிட்ட கல்வித் தகுதிகளையுடைய 18 வயது முதல் 35 வயதிற்குள்பட்ட வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம்.

சுயவிவரக்குறிப்பு, அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதாா் அட்டை மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும். இணையத்திலும் பதியலாம்.

வேலைநாடுநா்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரிலோ, 0431-2413510, 94990-55901, 94990-55902 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.