பாதுகாப்புச் சட்டத்தில் குழந்தைகளின் விருப்பத்தை அறிவது அவசியம்
குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளில் குழந்தைகளின் விருப்பத்தை அறிவது அவசியம் என்றாா் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான எம். கிறிஸ்டோபா்.

திருச்சி மாவட்ட நீதிமன்ற கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தைகளுக்கான சட்ட சேவை பிரிவுக்கான பயிற்சி பட்டறையில் பேசிய மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி கிறிஸ்டோபா். உடன் நீதிபதிகள் ஜெயசிங், மீனாசந்திரா, பாலாஜி உள்ளிட்டோா்.









