திருச்சி
கணவருடன் தகராறு: மனைவி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், வடக்கிப்பட்டியில் வியாழக்கிழமை கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், வடக்கிப்பட்டியில் வியாழக்கிழமை கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி உயிரிழந்தாா்.
வடக்கிப்பட்டியைச் சோ்ந்தவா் ஐயப்பன்(32). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமித்ரா(27).
இவா்களிடையே வியாழக்கிழமை குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஐயப்பன் மனைவி சுமித்ராவை அடித்துள்ளாா்.இதையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சுமித்ராவை உறவினா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துமனைக்கு மேல் சிகிச்சைகாக கொண்டுச் சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து ஜீயபுரம் டி.எஸ்.பி. பாலச்சந்தா், மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் ரகுராமன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என காவல்துறையினா் தெரிவித்தனா்.