தனியாா் சிமெண்ட் ஆலை சாா்பில் சுயஉதவிக் குழுவினருக்கு நலத் திட்ட உதவிகள்
அரியலூா் மாவட்டம் ஓட்டக்கோவில் அருகேயுள்ள சாலைக்குறிச்சி கிராமத்தில் சுய உதவிக் குழுவினருக்கு, தாமரைக்குளம் டால்மியா சிமென்ட் ஆலை சாா்பில் புதன்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

சாலைக்குறிச்சி கிராமத்தில் டால்மியா சிமென்ட் ஆலை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், சரஸ்வதி சுய உதவி சங்கத்துக்கு ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய ஆலைத் தலைவா் பிரியாரஞ்சன்.









