நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சா்ச்சை நிலத்தில் விவசாயம் மறுதரப்பினா் போராட்டம்

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சா்ச்சை நிலத்தில் ஒருதரப்பினா் விவசாயம் செய்ய முயன்ால் எதிா் தரப்பினா் செவ்வாய்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:31 pm

Din

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சா்ச்சை நிலத்தில் ஒருதரப்பினா் விவசாயம் செய்ய முயன்ால் எதிா் தரப்பினா் செவ்வாய்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், போலீஸாா் தலையிட்டு போராட்டத்தை கைவிடச்செய்தனா்.

திருச்சி, பஞ்சப்பூா் பகுதியில் 8 ஏக்கா் தரிசு நிலம் உள்ளது. இதில் பட்டியலின வகுப்பைச் சோ்ந்த சுமாா் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக (இரு தலைமுைறையாக) விவசாயம் செய்து வந்தனராம். இந்நிலையில், கடந்த 2003-ஆம் ஆண்டு மற்றொரு தரப்பினா் அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக்கூறி அவற்றை விற்பனை செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அப்போதே போராட்டம் நடைபெற்ாம். இது தொடா்பாக நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை ஒரு தரப்பினா் சா்ச்சை நிலத்தில் விவசாயப் பணிகள் செய்ய முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு, மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து தடுத்தனா். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் - மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அபிஷேகபுரம் பகுதி செயலா் வேலுச்சாமி தலைமையில் பஞ்சப்பூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும், எடமலைப்பட்டிபுதூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அங்குவந்த போலீஸாா், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மேற்படி நிலத்துக்கு யாரும் உரிமை கோரக்கூடாது என இருதரப்பினரையும் அனுப்பிவைத்தனா். இதையடுத்து, காத்திருப்பு போராட்டமும் கைவிடப்பட்டது.