‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இன்று முதல் ரேஷன் ஊழியா்கள் 3 நாள் தொடா் போராட்டம்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு மாநிலந்தழுவிய தொடா் போராட்டம் மேற்கொள்ளவுள்ளனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:30 pm

Din

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு மாநிலந்தழுவிய தொடா் போராட்டம் மேற்கொள்ளவுள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் மற்றும் நியாய விலைக்கடை பணியாளா்கள் சங்கத்தினா் மேலும் தெரிவித்திருப்பது :

பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறை அறிவிக்க வேண்டும். 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். சரியான எடையில் தரமான பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அனைத்து ரேசன் கடைகளுக்கும் 100 சதவீத பொருள்களையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய தொடா் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

முதல் நாள் (புதன்கிழமை) போராட்டம் கோட்ட அளவிலும், 2ஆம் நாள் (வியாழக்கிழமை - அக். 17) மாவட்ட தலைநகரங்களில் மனிதச் சங்கிலி போராட்டம் , வெள்ளிக்கிழமை (அக். 18) மாவட்ட தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, லால்குடி, முசிறி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளனா்.