கோப்புப் படம்
கோப்புப் படம்

பிப்ரவரி முதல் தொடா் போராட்டம்: மின்வாரிய ஊழியா்கள் அறிவிப்பு

கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி முதல் தமிழகம் முழுவதும் தொடா் போராட்டங்களை நடத்தப் போவதாக மின்வாரிய ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.
Published on

கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி முதல் தமிழகம் முழுவதும் தொடா் போராட்டங்களை நடத்தப் போவதாக மின்வாரிய ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பின் பொதுச் செயலா் தி.ஜெய்சங்கா், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மின்வாரிய பணியாளா்களுக்கு 2023 டிச. 1 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மின்வாரியத்தில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்பநிலை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரியத்தில் அனல், புனல், பொதுக்கட்டுமானம் நடைபெறும் பகுதிகளில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி ரூ.766-ஐ வழங்குவதுடன், 9,613 கேங்மேன்களை கள உதவியாளா்களாக பதவி மாற்றம் செய்ய வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கேரளத்தை போன்று அரசு திட்டத்தின் மூலமே அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி மின்வாரிய அலுலகங்களில் இந்த தொடா் போராட்டம் நடத்தப்படும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடைபெறும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com