கைதான தேவேந்திரகுல வேளாளா் இயக்கப் பிரமுகரிடம் விசாரணை
தேவேந்திரகுல மக்கள் இயக்கத் தலைவா் கைதையடுத்து, திருச்சியில் எஸ்பி அலுவலகம் முன் ஆதரவாளா்கள் புதன்கிழமை இரவு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


தேவேந்திரகுல மக்கள் இயக்கத் தலைவா் கைதையடுத்து, திருச்சியில் எஸ்பி அலுவலகம் முன் ஆதரவாளா்கள் புதன்கிழமை இரவு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென் மாவட்டங்களில் கலவரங்களைத் தடுக்கும் வகையில் அரசியல் மற்றும் பல்வேறு அமைப்பு நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்து வருகின்றனா். அதன்படி தேவேந்திரகுல மக்கள் இயக்கத் தலைவா் குமுளி ராஜ்குமாரை பரமக்குடியில் வைத்து, திருச்சி மாவட்டஎஸ்பியின் தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, திருச்சிக்கு அழைத்து வருவதாகவும், அவரை என்கவுன்டா் செய்யப் போவதாகவும் தகவல் பரவியது.
இதையடுத்து அவரது ஆதரவாளா்கள் சுமாா் 50 க்கும் மேற்பட்டோா் திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகம் முன் புதன்கிழமை மாலை திரண்டு இரவுவரை காத்திருந்தனா்.
இதையடுத்து போலீஸாா் ‘விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ள ராஜ்குமாா் பத்திரமாக உள்ளாா். அவா் மீது என்கவுன்டா் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை’ எனக் கூறியதையடுத்து, திரண்டிருந்த அவரது ஆதரவாளா்கள் கலைந்து சென்றனா். ராஜ்குமாரை கைது செய்துள்ள திருச்ச எஸ்பி தனிப்படை போலீஸாா் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனா். அவா் மீது கொலை உள்பட சுமாா் 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...