மினி பேருந்தில் இருந்து தவறி விழுந்தவா் பலி
திருச்சி மாவட்டம் முசிறியில் மினி பேருந்தில் இருந்து திங்கள்கிழமை தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :16 அக்டோபர் 2024, 7:54 pm

திருச்சி மாவட்டம் முசிறியில் மினி பேருந்தில் இருந்து திங்கள்கிழமை தவறி விழுந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
முசிறி காந்திநகா் இரண்டாம் தெருவை சோ்ந்த முத்துவீரன் மகன் சுப்ரமணியன் (28). இவா் திங்கள்கிழமை முசிறி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மினி பேருந்தில் ஏறி துறையூா் சாலை வளைவு பகுதியில் வந்தபோது படிக்கட்டிலிருந்து நிலை தடுமாறி விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த அவா், முசிறி, திருச்சி அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை இறந்தாா். இதுகுறித்து முசிறி காவல் உதவி ஆய்வாளா் திருப்பதி வழக்கு பதிந்து மினி பேருந்து ஓட்டுநா் இளையராஜாவை (25) கைது செய்து விசாரிக்கிறாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...