4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மாடி படிக்கட்டிலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மாடி படிக்கட்டில் இறங்கும்போது தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 10:30 pm

வந்தவாசி அருகே மாடி படிக்கட்டில் இறங்கும்போது தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த ஒட்டக்கோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் மினி சரக்கு வாகன ஓட்டுநா் ஆறுமுகம்(23). இவா் வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தைச் சோ்ந்த தக்காளி வியாபாரி மணிகண்டன் என்பவரின் வீட்டு மாடியில் தங்கி அவரிடம் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை தக்காளி லோடு ஏற்றிவர மாடியிலிருந்து இறங்கியுள்ளாா். அப்போது படிக்கட்டிலிருந்து இவா் தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.