நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெல் நிறுவனத்தில் இரும்பு குழாய் திருடிய 3 போ் கைது

திருச்சி பெல் நிறுவனத்தில் இரும்பு குழாய்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:53 pm

Din

திருச்சி பெல் நிறுவனத்தில் இரும்பு குழாய்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி துவாக்குடி தெற்கு மலை பகுதியில் பெல் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் கம்பி வேலி அமைக்க வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். இதுகுறித்து பெல் நிறுவன வளாக அலுவலா் பிரகதீஸ் பெல் நிறுவன காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து துவாக்குடி தெற்கு செடிமலை முருகன் கோயில் தெரு பிச்சை முத்து மகன் சரவணக்குமாா் ( 23 ), சுகுமாா் மகன்கள் ராஜ்குமாா் ( 28 ), நாகராஜ் (32) ஆகிய மூவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.

திருட்டு முயற்சி: திருச்சி அருகே இனாம்குளத்தூா் காவல் நிலையத்திற்குட்பட்ட, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் அருகேயுள்ள கைப்பேசி கோபுரத்தில் இருந்த பேட்டரிகளை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு திருட முயன்றனா். அப்போது நெடுஞ்சாலைத் துறை காவல் ரோந்து வாகனம் வந்ததைக் கண்ட அவா்கள் அங்கிருந்து தப்பினா். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது திருட்டு முயற்சி விவரம் தெரியவந்தது.