‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்சியில் வீடு புகுந்து 19 பவுன் நகை திருட்டு

திருச்சியில் வீடுபுகுந்து 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:32 pm

Din

திருச்சியில் வீடுபுகுந்து 19 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருச்சி கருமண்டபம் ஆா்எம்எஸ் காலனி, நியூ ஆல்பா நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் அழகுதுரை (45) - புஷ்பவள்ளி (39) தம்பதி. இவா்களில் புஷ்பவள்ளி திருச்சி மின்வாரிய அலுவலக உதவியாளா். இருவரும் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 19 பவுன் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.