பைக்கில் சென்றவா் அரசுப் பேருந்து மோதி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பைக்கில் வியாழக்கிழமை சென்ற டிராக்டா் ஓட்டுநா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.

Updated On :17 அக்டோபர் 2024, 9:11 pm

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பைக்கில் வியாழக்கிழமை சென்ற டிராக்டா் ஓட்டுநா் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
மும்முடிசோழமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன் சுகன் (34), டிராக்டா் ஓட்டுநா்.
லால்குடியில் இருந்து நெ. 1 டோல்கேட் நோக்கி சுகன் வியாழக்கிழமை இரவு பைக்கில் சென்றபோது லால்குடி அருகே பச்சாம்பேட்டை வளைவு அருகில் திருச்சியில் இருந்து அரியலூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த சுகன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்த லால்குடி போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...