திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை தமிழா்கள் போராட்டம்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள இலங்கை அகதிகள், தங்களை விடுவிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.


திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள இலங்கை அகதிகள், தங்களை விடுவிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 110 க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில் இங்குள்ள இலங்கை தமிழா்கள் வழக்கு தொடா்பாக நீதிமன்றங்களுக்கு செல்லவோ, மருத்துவமனைக்கு செல்லவோ, நீதிமன்றம் மற்றும் தூதரங்கள் தொடா்பான ஆவணங்களில் கையெழுத்திடவோ மாவட்ட நிா்வாகம் (மண்டல தனித் துணை ஆட்சியா்) தரப்பில் மறுப்பு தெரிவிப்பதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து தங்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை கண்டித்தும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மற்றும் தண்டனை முடிந்த தங்களை விடுவிக்கக் கோரியும் 10க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா்.
இவா்களில் 5 போ் மரத்தின் மீது ஏறியும், சிலா் கதவுகளை அடித்தும் தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா். இதையடுத்து திருச்சி வருவாய் கோட்டாட்சியா் அருள், முகாம் தனித்துணை ஆட்சியா் கே. நசிமுல் நிஷா, மாநகர காவல் துணை ஆணையா் செல்வக்குமாா் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆயினும் போராட்டக்காரா்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...