நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாழையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சி

வாழையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு வரும் 24ஆம் தேதி ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 9:14 pm

Din

வாழையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு வரும் 24ஆம் தேதி ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், திருச்சி மாவட்டம், சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் வாழையில் ஊட்டச்சத்து மேலாண்மை, உர நிா்வாகம், நுண்ணூட்டம் அளித்தல் போன்ற தலைப்புகளின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் கலந்து கொள்ள ஆா்வம் உள்ளவா்கள் 04312962854, 91717-17832, 85088-35287 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், 91717-17832 என்ற எண்ணிற்கு கட்செவி அஞ்சல் மூலமோ, குறுஞ்செய்தி மூலமோ முன்பதிவு செய்யலாம் என வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா பாபு தெரிவித்துள்ளாா்.