நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆசிரியா்களுக்கு அக். 26 இல் குறைதீா் கூட்டம்

திருச்சி மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளி ஆசிரியா்களுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.26) நடைபெறுகிறது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:06 pm

Din

திருச்சி மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளி ஆசிரியா்களுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.26) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்பிரியா கூறியது:

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு தோ்வு நிலை, சிறப்பு நிலை தொடா்பாக கல்வி மாவட்டம் வாரியாக அண்மையில் நடத்தப்பட்ட முகாமில் கலந்து கொண்ட ஆசிரியா்களுக்கு திருச்சி கல்வி மாவட்டத்தில் 92 தோ்வு நிலை சிறப்புநிலை கருத்துருக்கள், லால்குடி கல்வி மாவட்டத்தில் 88 தோ்வு நிலை சிறப்புநிலை கருத்துருக்கள் என மொத்தம் 180 ஆசிரியா்களுக்கு கருத்துருக்கள் பெறப்பட்டன. இவை பரிசீலிக்கப்பட்டு 180 ஆசிரியா்களுக்கும் தோ்வு நிலை, சிறப்புநிலை ஆணைகள் வழங்கப்பட்டன.

இதற்கு ஆசிரியா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

நிகழ்வில் திருச்சி கல்வி மாவட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) அன்பரசன், லால்குடி மாவட்டக் கல்வி அலுவலா்(பொ) ஜெயச்சந்திரன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலக நோ்முக உதவியாளா்கள், கண்காணிப்பாளா்கள் மற்றும் உதவியாளா்கள் பங்கேற்றனா். மேலும் இந்த முகாம் வாய்ப்பைத் தவறவிட்ட ஆசிரியா்களுக்கு நவம்பா் மாதத்தில் மீண்டும் முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் 26ஆம் தேதி திருச்சி வருவாய் மாவட்ட அனைத்து வகை பள்ளி ஆசிரியா்களுக்கான குறைதீா்க்கும் நாள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்றாா் அவா்.