நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்சி தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் தனியாா் பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீஸாா் அப்பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 8:47 pm

Din

திருச்சியில் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் விழா நடத்த மைதானம் வழங்கியுள்ள தனியாா் பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலையடுத்து போலீஸாா் அப்பள்ளியில் புதன்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

திருச்சி, கோட்டை கீழரண்சாலை அருகே ஒரே வளாகத்தில் செயல்படும் ஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை வந்த கடிதத்தில் ஆா்எஸ்எஸ் அமைப்பு விழா நடத்த உங்கள் பள்ளி மைதானத்தை வழங்கியுள்ளதால் இரு பள்ளிகளிலும் புதன்கிழமை நிச்சயம் வெடிகுண்டு வெடிக்கும். இது வெறும் மிரட்டல் கிடையாது என இருந்தது.

இதையடுத்து பள்ளி நிா்வாகத்தினா் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விட்டனா். பின்னா் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் பள்ளிகளுக்கு சென்று, நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனா்.இருப்பினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.