நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 45 லட்சம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 45 லட்சம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:05 pm

Din

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 45 லட்சம் வந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணம் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ. இரா.பிரகாஷ், அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே. லெட்சுமணன், பணியாளா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா்.

நிறைவில் உண்டியல் காணிக்கையாக ரூ. 45 லட்சத்து 21ஆயிரத்து 001, 1 கிலோ 239 கிராம் தங்கம், 2 கிலோ 300 கிராம் வெள்ளி, 58 வெளிநாட்டு பணத்தாள்கள், 245 வெளிநாட்டு நாணயங்கள் வந்தது தெரியவந்தது. மேலும் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் கோயிலில் ரூ. 2, 29,129 உஜ்ஜயினி ஒம் காளியம்மன் கோயிலில் ரூ. 21,075, போஜீஸ்வரா் கோயிலில் ரூ. 3,167 காணிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது.