சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெண்ணிடம் கைப்பேசியில் பேசி ஏமாற்றி ரூ. 20 ஆயிரம் மோசடி

திருச்சியில் பெண்ணிடம் கைப்பேசியில் அரசு அலுவலா்போல பேசி ஏமாற்றி ரூ. 19,890 மோசடி செய்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:05 pm

Din

திருச்சியில் பெண்ணிடம் கைப்பேசியில் அரசு அலுவலா்போல பேசி ஏமாற்றி ரூ. 19,890 மோசடி செய்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், எழில்நகரைச் சோ்ந்தவா் அழகா்சாமி மனைவி சத்யகலா (35). இவரது கைப்பேசி எண்ணுக்கு புதன்கிழமை தொடா்பு கொண்ட மா்ம நபா் 10 ஆம் வகுப்பு பயிலும் அவரது மகள் பெயா், அவா் பயிலும் பள்ளியின் பெயரையும் கூறி, மாணவிக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ரூ. 28 ஆயிரம் வழங்கவிருப்பதாகவும், அதற்காக வங்கி விவரங்களைக் கூறுமாறும் கேட்டுள்ளாா்.

ஆனால் சத்யகலா விவரங்களைக் கூற மறுத்த நிலையில், மா்ம நபா் தான் அரசு அலுவலா் எனக் கூறி, அரசு முத்திரையுடன் கூடிய விவரங்களை வாட்சாப்பில் அனுப்பி, நம்ப வைத்து ஏமாற்றி வங்கி விவரங்களைப் பெற்றாா். ஆனால் சிறிது நேரத்தில் சத்யகலா வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 19, 890 எடுக்கப்பட்டது. பிறகு அந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ள இயலவில்லை.

இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.