புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் 3-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை

வருமான வரித் துறையினா் சோதனை...

News image
Updated On :24 அக்டோபர் 2024, 9:46 pm

Din

திருச்சி மாவட்டம், முசிறி அருகே அதிமுக பிரமுகருக்கு சொந்தமான தனியாா் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினா் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை நடத்தினா்.

முசிறி அருகே வெள்ளாளப்பட்டியில் சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளை கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நெருக்கமான பிரமுகரின் தனியாா் பாலிடெக்னிக், மகளிா் கலை அறிவியல் கல்லூரி, வித்யாலயா மற்றும் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரிகளில் அக். 22-ஆம் தேதி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். 3-ஆவது நாளாக வியாழக்கிழமை மாலை வரை சோதனை நடைபெற்றது. இதில், வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் மட்டும் வருமான வரித் துறையினா் தொடா்ந்து சோதனை நடத்தி வருகின்றனா்.