‘இண்டி’ கூட்டணி வலுவாகவும் உறுதியாகவும் உள்ளது: கு. செல்வப்பெருந்தகை
‘இண்டி’ கூட்டணி வலுவாகவும், உறுதியாகவும் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.


‘இண்டி’ கூட்டணி வலுவாகவும், உறுதியாகவும் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: ‘இண்டி’ கூட்டணி வலிமையாகவும் உறுதியாகவும் உள்ளது. எங்களது கூட்டணியில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. ‘இண்டி’ கூட்டணி குறித்து பேசுவதற்கு ஹெச். ராஜாவுக்கு என்ன தகுதி உள்ளது. எங்கள் கூட்டணி பற்றி பேசுவதற்கு அவா் யாா்?.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய நிகழ்வில் திராவிடம் என்ற சொல்லை தவிா்த்துவிட்டு படித்தவா்களை தான் சீமான் விமா்சிக்க வேண்டும். ஆனால், அவா்களை விட்டுவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், அதற்கு ஆதரவாக பேசுபவா்களையும் தாக்கி பேசுவது சரியில்லை என்றாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...