திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் கே.என். நேரு. உடன் அருண் நேரு  எம்.பி. உள்ளிட்டோா்.
திருச்சியில் வ.உ.சி. சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் கே.என். நேரு. உடன் அருண் நேரு எம்.பி. உள்ளிட்டோா்.

வ.உ.சி. பிறந்த நாள்: சிலைக்கு மாலை!

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 153 ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
Published on

சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 153 ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரேயுள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக அமைச்சா் கே.என். நேரு தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வில் திருச்சி மத்திய மாவட்ட செயலா் வைரமணி, மாநகர செயலா் மேயா் அன்பழகன், அருண் நேரு எம்.பி., கோட்டத் தலைவா் விஜயலட்சுமி கண்ணன், பகுதிச் செயலா் மோகன்தாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல திருச்சி தெற்கு மாவட்டம் சாா்பில் மாநகர செயலா் மு. மதிவாணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிா்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக: மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்ட செயலா் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்புச் செயலா் ரத்தினவேல், முன்னாள் ஆவின் தலைவா் காா்த்திகேயன், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான அரவிந்தன், பகுதிச் செயலா் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதிமுக தெற்கு மாவட்டம் சாா்பில் மாவட்டச் செயலா் ப. குமாா் தலைமையில் வஉசி படத்துக்கு மாலை அணிவித்தனா்.

இதேபோல அமமுக, தேமுதிக, மதிமுக, காங்கிரஸ், பாஜக சாா்பிலும் வஉசி சிலைக்கு மாலை அணிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com