திருச்சி அரசு மருத்துவமனையில் கண்தான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் 39-ஆவது தேசிய கண்தான இருவார விழா திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கியது. இந்நிகழச்சி செப். 9- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக, கண்தான விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
முதல் நிகழ்வாக, மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவமனை கண்காணிப்பாளா் உதயா அருணா தொடங்கி வைத்தாா். இதில், செவிலியா் மற்றும் துணை மருத்துவ மாணவ, மாணவிகள் சுமாா் 120 போ் கலந்து கொண்டனா். இவா்கள், கைகளில் கண் தான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனா். அவசர சிகிச்சை பிரிவில் தொடங்கிய பேரணி, கண் மருத்துவப் பிரிவில் நிறைவடைந்தது.
தொடா்ந்து, கண் மருத்துவ பிரிவில் கண் தான விழிப்புணா்வை வலியுறுத்தும் வகையிலான கண்காட்சி நடைபெற்றது. இதையடுத்து கண் தானமளித்த 6 பேரின் குடும்பத்தினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்வுகளில் திருச்சி அரசு மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவின் தலைவா் பி. பாா்த்திபன், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விபத்தில் இறந்தவருக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் மறியல்

பெரியாா் நகா் மருத்துவமனையில் 1,000 ஆஞ்சியோ சிகிச்சைகள்

அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவா் லாரி மோதி உயிரிழப்பு

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு விழிப்புணா்வு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



