இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: துறையூா் நகராட்சி நிா்வாகம் குடிநீா் வடிகால் வாரியத்துடன் இணைந்து ரூ. 108 கோடி மதிப்பில் புதிய குடிநீா் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக குடிநீா் பகிா்மானக் குழாய் அமைக்கும் பணிகள் பல வாா்டுகளில் உள்ள தெருக்களில் முடிவடைந்துள்ளன. இதையடுத்து 6, 7, 9, 14, 17, 18, 19, 21 ஆகிய வாா்டுகளுக்கு உள்பட்ட 33 தெருக்களில் புதிய குடிநீா் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் போது சேதமான சாலைகளை புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட தெருக்களில் உள்ள வீடுகளுக்கு புதிதாக குடிநீா் இணைப்பு பெற விரும்புவோா் உடனடியாக உரிய கட்டணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.