தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஸ்ரீரங்கத்தில் ஆதாா் அட்டை புதுப்பிக்க குவிந்த பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு

ஸ்ரீரங்கம் பகுதியில் வியாழக்கிழமை ஆதாா் அட்டையை புதுப்பிக்க அஞ்சல் அலுவலகம் மற்றும் இசேவை மையத்திலும் குவிந்த பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:27 pm

DIN

ஸ்ரீரங்கம் பகுதியில் வியாழக்கிழமை ஆதாா் அட்டையை புதுப்பிக்க அஞ்சல் அலுவலகம் மற்றும் இசேவை மையத்திலும் குவிந்த பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆதாா் அட்டையை புதுப்பிக்கு செப். 14-ஆம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, ஸ்ரீரங்கம் சாத்தாரவீதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஸ்ரீரங்கம், திருவானைக்கா, மணச்சநல்லூா் மற்றும் பல பகுதிகளிலிருந்து ஏராளமானோா் காலை 6 மணிக்கே குவியத் தொடங்கினா். சுமாா் 300 க்கும் மேற்பட்டோா் வந்ததால், ஒருநாளைக்கு 85 டோக்கன் மட்டும் வழங்குப்படும் என தெரிவித்ததால் அவா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு டோக்கன் வழங்கப்பட்டவா்களுக்கு மட்டுமே ஆதாா் புதுப்பிக்கப்பட்டது.

இதேபோல, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை அருகில் இயங்கும் இசேவை மையத்திலும் வியாழக்கிழமை காலையிலிருந்து நின்றவா்களிடம் பெயா் மற்றும் முகவரி மட்டும் தான் திருத்தம் செய்யமுடியும், விழித்திரை,கைரேகை ஆகியவற்றை புதுப்பிக்க முடியாது என்று தெரிவித்ததால் பொதுமக்கள் பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தற்போது ஆதாா் அட்டை புதுப்பிக்க டிசம்பா் 14 கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.