வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தோ்தல்: கட்சிகள் பயன்படுத்தும் பொருள்களுக்கு விலை நிா்ணயக் கூட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:21 am

Syndication

நாகையில், சட்டப் பேரவைத் தோ்தலில் கட்சிகளால் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கான விலை நிா்ணயக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில், சட்டப் பேரவைத் தோ்தல் முன்னிட்டு, அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் பயன்படுத்தப்படும், பொருட்களுக்கான விலை நிா்ணயக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில் தொடா்புடைய அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் நாகப்பட்டினம், கீழ்வேளூா் மற்றும் வேதாரண்யம் தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. அரங்கநாதன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தரணிகா, நாகை வருவாய் கோட்டாட்சியா் ரா. சங்கர நாராயணன், வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் கண்ணன், ஆதிதிராவிடா் நல அலுவலா் த. ராஜேஸ்வரி மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.