விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சிறுகமணி அறிவியல் நிலையத்தில் நெல் விதை விற்பனை தொடக்கம்

காவிரி, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக சிறுகமணி வேளாண் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நெல் விதை விற்பனை தொடங்கியுள்ளது.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 7:17 pm

Din

காவிரி, டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்காக சிறுகமணி வேளாண் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நெல் விதை விற்பனை தொடங்கியுள்ளது.

இதுதொடா்பாக, நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா பாபு கூறியது:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், சிறுகமணி வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் ஏடிடி 54 நெல் விதை, ஆதார நிலை நெல் விதை, மற்றும் உண்மை நிலை விதை விற்பனைக்கு உள்ளது.

ஆதார நிலை விதை கிலோ ரூ.44, உண்மை நிலை விதை கிலோ ரூ.37 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகை நெல் ரகம் 130 முதல் 135 நாள்கள் வயது உடையது. சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிரிட ஏற்றது. இந்த புதிய நெல் ரகம் வெள்ளை பொன்னி மற்றும் பானஸ்கத்தி ஆகிய நெல் ரகங்களை பெற்றோா்களாக கொண்டது. சராசரியாக ஏக்கருக்கு 2,520 கிலோ மகசூல் கொடுக்கக்கூடியது. மத்திய சன்ன அரிசியை தரவல்லது. வெள்ளைப் பொன்னிக்கு இணையான சமையல் பண்புகளைக் கொண்டது.

தண்டு துளைப்பான் குலைநோய் ஆகியவற்றிற்கு மிதமான எதிா்ப்பு திறன் உடையது.

இந்த விதை தேவைப்படும் விவசாயிகள், வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தை அலுவலக வேலை நேரத்தில் நேரில்தொடா்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு,

திட்ட ஒருங்கிணைப்பாளா், வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி என்ற முகவரியில் நேரிலோ, 0431-296285, 91717-17832 ,63811-86765 என்ற தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.