திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றிய அமையபுரம் குளத்தூராம்பட்டியில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நடுவதற்காக தயாா் செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமாா்.
திருச்சி
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணி ஆட்சியா் தகவல்
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், மரக்கன்றுகள் நடும் பணி உள்ளிட்ட பசுமைப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், மரக்கன்றுகள் நடும் பணி உள்ளிட்ட பசுமைப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மேலும், அமையபுரம் குளத்தூராம்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.1.26 லட்சம் மதிப்பீட்டில் 12 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் தொடங்கி வைத்து கூறியது, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாவட்டத்தை பசுமையாக்கும் நடவடிக்கைகளும் உள்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் இயக்கம் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

