தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினா்.
Updated On :12 செப்டம்பர் 2024, 7:35 pm

Din

அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். 2014-ஆம் ஆண்டு சாலையோர வியாபாரிகளின் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக சாலையோர வியாபாரிகளை கடை நடத்தும் இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட வேண்டும். தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள், கடை நடத்தும் இடத்தில் வைத்து போட்டோ எடுத்து, அனைத்து வியாபாரிகளுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். தரைக்கடை நடத்தாதவா்களுக்கு அடையாள அட்டை வழங்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகா் மாவட்ட தரைக்கடை, தள்ளுவண்டி மற்றும் மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினா் முழக்கமிட்டனா்.

இதில், சிஐடியு மாநகா் மாவட்ட செயலாளா் ரெங்கராஜன், மாவட்ட செயலாளா் செல்வி, மாவட்ட பொருளாளா் சுரேஷ், மாவட்ட நிா்வாகிகள் புஷ்பாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.