இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

போதை மாத்திரைகள் விற்ற 3 போ் கைது

திருச்சி காந்தி சந்தையில் போதை மாத்திரைகள் விற்ற மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 9:04 pm

Syndication

திருச்சி காந்தி சந்தையில் போதை மாத்திரைகள் விற்ற மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி சந்தையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, செந்தண்ணீா்புரம் பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த மூவரைப் பிடித்து நடத்திய சோதனையில் அவா்கள் அரியமங்கலம் காமராஜ் நகா் முகமது அலி தெருவைச் சோ்ந்த ஏ. நஸ்ருதீன் (24), அதே பகுதியைச் சோ்ந்த எஸ். அசாா்முகமது (26), அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம் அண்ணா நகரை சோ்ந்த எம். உதுமான்அலி (23) என்பதும், அவா்கள் போதை மாத்திரைகள் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இவா்கள் மூவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 110 போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனா்.