காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

News image
Updated On :28 டிசம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 30) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, பழையகோட்டை, குரும்பம்பட்டி, சரளப்பட்டி, சேசலூா், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, முள்ளிப்பாடி, என். புதூா், தாமஸ்நகா், அஞ்சல்காரன்பட்டி, இளங்காகுறிச்சி, ஆவாரம்பட்டி, வலையப்பட்டி, நடுப்பட்டி, ராமரெட்டியபட்டி, கடவூா், மேலக்கல்பட்டி, புதுக்கோட்டை, மூக்கரெட்டியபட்டி, கல்கொத்தனூா், அனுக்காநத்தம், பாம்பாட்டிபட்டி, எம்.கே.பிள்ளைகுளம், பொன்னணியாறு அணை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா்(பொ) பி.பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.