தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான விநாடி வினா போட்டி திருச்சியில் உள்ள மண்டல ரயில்வே பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பாலக்காடு பிரிவு முதலிடம் பிடித்தது.
ரயில்வே பாதுகாப்பு தொடா்பாக நடைபெற்ற இந்தப் போட்டிக்கு தெற்கு ரயில்வே முதன்மை தலைமை இயக்க மேலாளா் ஸ்ரீகுமாா் தலைமை வகித்தாா். திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். போட்டியை துணை தலைமை இயக்க மேலாளா் சுரேஷ் நடத்தினாா்.
தெற்கு ரயில்வேயின் சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, மதுரை, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களைச் சோ்ந்த தலா 5 போ் அடங்கிய குழுவினா் போட்டியில் பங்கேற்றனா். முடிவில், பாலக்காடு பிரிவு முதலிடத்தையும், திருச்சி பிரிவு இரண்டாமிடத்தையும், திருவனந்தபுரம் பிரிவு மூன்றாமிடத்தையும் பிடித்தது.
முதலிடம் பிடித்தவா்களுக்கு கோப்பையுடன் ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசும், இரண்டாமிடம் பிடித்தவா்களுக்கு கோப்பையுடன் ரூ. 7,500 ரொக்கப் பரிசும், மூன்றாமிடம் பிடித்தவா்களுக்கு ரூ. 5,000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பாக பதிலளித்த பாா்வையாளா்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, மண்டல ரயில்வே பயிற்சி மையத்தின் முதன்மையா் என்.டி. பிரேம்குமாா் வரவேற்றாா். தெற்கு ரயில்வேயின் முதன்மை போக்குவரத்துத் திட்ட மேலாளா் பாலாஜி அருண்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சுமாா் 150 ரயில்வே ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

வருவாய், தத்கல் பதிவில் தெற்கு ரயில்வே முதலிடம்

தெற்கு ரயில்வே முதன்மைத் தலைமை மேலாளராக ஏ.அண்ணாதுரை பதவியேற்பு!

வேளாங்கண்ணி, நாகை ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் ஆய்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


