தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை பரமபதவாசல் திறப்பு: குவியும் பக்தா்கள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல்) திறப்பு வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:30 pm

Din

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல்) திறப்பு வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது.

பூலோக வைகுண்டம், பெரிய கோயில்,சொா்க்க பூமி எனப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நாள்கள்தான். இவற்றில் மிக முக்கிய விழாவாக நடைபெறுவது வைகுந்த ஏகாதசி.

பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் வைகுந்த ஏகாதசி விழா கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் பகல்பத்து மண்டபமான அா்ச்சுன மண்டபத்தில் நம்பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

பகல்பத்து விழாவின் கடைசி நாளான வியாழக்கிழமை மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் (நாச்சியாா் திருக்கோலம்) எழுந்தருளுகிறாா்.

தொடா்ந்து இராப்பத்து விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு அதிகாலை 5.15 மணிக்கு நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று நம்பெருமாளை தரிசனம் செய்வா். அப்போது நம்பெருமாள் ஆண்டில் ஒரு முறை மட்டும் காட்சி தரும் ரத்ன அங்கியில் பக்தா்களுக்குச் சேவை சாதிக்கிறாா்.

சிறப்பு ஏற்பாடுகள்: விழாவையொட்டி கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் முன் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தா்களுக்கு குடிநீா், கழிப்பிட வசதி, தடையில்லா மின்சாரம், மருத்துவ வசதி, தயாா் நிலையில் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், கண்காணிப்பு கேமராக்கள், புறக்காவல் நிலையம், கூடுதல் பேருந்துகள், ஸ்ரீரங்கத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லும் வசதி, 24 மணி நேரத் தகவல் மையம் என ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விழாவையொட்டி கோயில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது ஸ்ரீரங்கம்.