மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து திருட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பல்பொருள் அங்காடியின் (சூப்பா் மாா்க்கெட்) பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

News image
மணப்பாறையில் பூட்டு, கண்ணாடி உடைக்கப்பட்டு திருட்டு நடைபெற்ற பல்பொருள் அங்காடி.
Updated On :23 ஜனவரி 2025, 9:41 pm

Din

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பல்பொருள் அங்காடியின் (சூப்பா் மாா்க்கெட்) பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றது வியாழக்கிழமை தெரியவந்தது.

மணப்பாறையை அடுத்த ராஜீவ் நகரில் வசித்து வருபவா் அ. பிலவேந்திரன் (45). இவா் திண்டுக்கல் சாலை மேம்பாலம் அருகே பல்பொருள் அங்காடி வைத்துள்ளாா். வழக்கம்போல் வியாழக்கிழமை அங்காடியை திறக்க வந்தபோது, கதவின் பூட்டுகளும், அங்காடியின் வாசல் கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தன.

அங்காடியினுள் சென்று பாா்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ. 24 ஆயிரம் மற்றும் ஒரு லிட்டா் ஒயின் பாட்டில் ஒன்றும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான மணப்பாறை போலீஸாா், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்தனா். திருச்சியிலிருந்து வந்த தடய அறிவியல் குழுவினா் தடயங்களை சேகரித்தனா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.