சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

திருவானைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் திங்கள்கிழமை மாலை தை மாத தேய்பிறை சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image
திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி கோயிலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற தை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி நந்திக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
Updated On :27 ஜனவரி 2025, 9:25 pm

Din

ஸ்ரீரங்கம்: திருவானைக்கோயில் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் திங்கள்கிழமை மாலை தை மாத தேய்பிறை சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தை மாத தேய்பிறை சோமவார பிரதோஷமான திங்கள்கிழமை மாலை சாமி சன்னதியின் எதிரேயுள்ள பிரதோஷ நந்திக்கு பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி, இளநீா் உள்ளிட்ட 18 விதமான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். முடிவில் அனைவருக்கும் சந்தனம் மற்றும் பிரசாதங்கள் வழங்கபட்டன.